காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல்- வாக்காளர் பட்டியல் 20ம் தேதி வெளியிட முடிவு

by Editor / 11-09-2022 02:47:02pm
காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல்- வாக்காளர் பட்டியல் 20ம் தேதி வெளியிட முடிவு

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோர் 17ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8ம் தேதி கடைசி நாளாகும். காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வருகிற 22ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் பிரதிநிதிகள் பட்டியல் வருகிற 20ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via