மூன்று சகோதரிகள் லவ் கேம் என்னும் ஒரு ஆன்லைன் விளையாட்டில்... மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

by Admin / 05-02-2026 09:07:45am
மூன்று சகோதரிகள் லவ் கேம் என்னும் ஒரு ஆன்லைன் விளையாட்டில்... மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

உத்திர பிரதேச காஜியாபாத்தில் பாரத் சிட்டி என்கிற குடியிருப்பு பகுதியில் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து மூன்று சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டனர். உயிரிழந்தவர்கள் விஷிகா ,பிராட்சி, பாக்கி ஆகிய மூன்று சகோதரிகள் லவ் கேம் என்னும் ஒரு ஆன்லைன் விளையாட்டில் தங்களை தீவிரமாக ஈடுபடுத்தி உள்ளனர். இதன் காரணமாக அவருடைய தந்தை இந்த மூன்று சிறுமிகளையும் கண்டித்துள்ளார். அத்துடன் இவர்கள் சில நாட்களாக இந்த ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தி வைத்து இருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சகோதரிகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்தை ஆய்வு செய்த காவல்துறையினர் அங்கிருந்து ஒரு டைரியை கைப்பற்றியுள்ளனர். அதில், நாங்கள் கொரியாவை விட்டு வெளியேற முடியாது ..கொரியா தான் எங்கள் வாழ்க்கை. எங்களை உங்களால் விடுவிக்க முடியாது என்றும், சாரி, அப்பா என்றும் உருக்கமாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளனர். கொரோனா காலத்தில் பழகிய இந்த ஆன்லைன் விளையாட்டு பழக்கத்தால் படிப்பில் கவனம் அன்று அவர்கள் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மூன்று சகோதரிகள் லவ் கேம் என்னும் ஒரு ஆன்லைன் விளையாட்டில்... மாடியில் இருந்து குதித்து தற்கொலை.
 

Tags :

Share via