ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இரண்டு முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்

by Admin / 05-02-2026 09:09:25am
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இரண்டு முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீரில் உதயம் ஓர் மாவட்டத்தில் உள்ள பசந்த்கர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவம் -சி ஆர் பி எப் இரு அணிகளும் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். இரு தரப்புக்கு இடையிலும் மோதல் ஏற்பட்டது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இரண்டு முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர் .இதில் ஒருவன் மாவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். பயங்கரவாதிகள் ஓர் குகைக்குள் பதுங்கி இருந்தன பாதுகாப்பு படையின் துல்லியமான தாக்குதலில் அந்த மறைவிடம் தகர்க்கப்பட்டு அவர்களையும் வீழ்த்தினார். ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து உயர்தர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன இதில் அமெரிக்க தயாரிப்பான எம்- 4 கார் பைன் மற்றும் ஏ.கே -47 ரக துப்பாக்கிகள் அடங்கும். இதே இதனைத் தொடர்ந்து கிஸ்த்வார் மாவட்டத்திலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். இதன் மூலம் மூன்று பயங்கரவாதிகளை இந்திய ராணுவமும் சி பி ஆர் பி எப் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இரண்டு முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்
 

Tags :

Share via