ரவுடியுடன் இருந்த அக்கா மகன் மாயம்.! உறவினர்கள் குற்றச்சாட்டு.
திருச்சியை சேர்ந்த ரவுடி துரைசாமியை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்தனர். காட்டுக்குள் பதுங்கி இருந்த அவரை பிடிக்க சென்றபோது காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் துரையின் அக்கா உமாதேவியின் மகன் பிரதீப் என்கிற இளைஞரை காணவில்லை என்றும், அவரை ஒப்படைக்கும் வரை போராட்டத்தை விடப்போவதில்லை என்றும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :


















