அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகள் அமைச்சரிடம் கோரிக்கை.

தென்காசி தற்குமாவட்ட முன்னாள் திமுக செயலாளர் சிவபத்மநாதன் இன்று சென்னையில் தமிழக
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை நேரில்சந்தித்து திமுக ஆட்சியில் தமிழ்நாடு முதல்வர்
மு.க .ஸ் டாலினால் ஆலங்குளம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய வளாகம் திறந்து வைக்கப்பட்டது.இந்த கல்லூரியில் சில குறிப்பிட்ட பாடப் பிரிவுகள் மட்டுமே தற்போது உள்ளது கூடுதல் பாடப்பிரிவுகளாக பி ஏ தமிழ் பி ஏ இங்கிலீஷ் பிஎஸ்சி பிசிகல் எஜுகேஷன் போன்ற பாடப்பிரிவுகள் இளநிலை பிரிவுகளிலும் அதேபோல முதுநிலை கல்வியில் எம் ஏ இங்கிலீஷ் எம் காம் வணிகவியல் எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற முதுகலை ப் பாடப்பிரிவுகளும் வேண்டும் என்றும், ஆலங்குளம் பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன கிராமப் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் கல்லூரியில் பயின்று வருவதாகவும், குறிப்பிட்ட பாடப்பிரிவுகள் தவிர பிற பாடப்பிரிவுகளுக்கும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கும் கல்வி பயில நெடுந்தூரம் பயணம் சென்று பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், மேலும் கிராமப்புற மாணவிகள் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்களாக உள்ள தாகவும்,எனவே நெடுந்தூரம் சென்று அவர்களால் கூடுதல் கல்வி பயில இயலாத சூழல் உள்ளதாகவும்,
மனுவில் கண்டுள்ள கூடுதல் பாடப் பிரிவுகளை வழங்கிட கேட்டுக் கொண்டார்.நிகழ்ச்சியின் போது தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் மாவட்ட விவசாய அணி துணை தலைவர் செல்வன் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய துணை பெரும் தலைவர் செல்வக்கொடி ராஜாமணி குருக்கள்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் வனராஜ், செல்வகுமார் முத்து மற்றும் முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....
Tags : அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகள் அமைச்சரிடம் கோரிக்கை.