நடிகர் விஜய்யை கண்டு திமுக பயப்படுகிறது - கடம்பூர் ராஜூ

by Staff / 15-10-2023 05:13:09pm
நடிகர் விஜய்யை கண்டு திமுக பயப்படுகிறது - கடம்பூர் ராஜூ

நடிகர் விஜய்யை கண்டு திமுக பயப்படுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை இன்று கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய்யை பார்த்து திமுக பயப்படுகிறது. சினிமாவில் எந்த நடிகர்களாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகளை அரசு பார்க்கக் கூடாது. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னணி நடிகர்களின் படம் வரும்போது எந்த பாரபட்சமும் பார்க்காமல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தோம். அதிமுக ஆட்சியில்தான் வெளிப்படையான நிர்வாகத்தால் திரைத்துறை நல்ல முன்னேற்றம் பெற்றது. தற்போது திரைத்துறை முடங்கி உள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆதிக்கத்தால் தமிழ் சினிமாவில் 200 திரைப்படங்கள் வெளியிட முடியாமல் முடங்கி உள்ளது. விஜய்யின் லியோ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் படத்திற்கு அனுமதி கொடுத்தனர். பாரபட்சமாக பார்க்கப்படும் நிலை திரைத்துறைக்கு நல்லது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via

More stories