அண்ணல் அம்பேத்கரின் பேரன் அவமதிக்கப்பட்டாரா..?

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, இன்று சென்னையில், தமிழக அரசு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கலந்து கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு சென்னை வருகை தந்த பிரகாஷ் அம்பேத்கரை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்க அரசுத் தரப்பிலிருந்து ஒரு அரசு அதிகாரியோ, அரசியல் தலைவரோ செல்லவில்லையாம். தாஜ் ஹோட்டலில் தங்கியிருக்கும் அவர், தன்னை வரவேற்க ஒருவர் கூட வரவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Tags : அண்ணல் அம்பேத்கரின் பேரன் அவமதிக்கப்பட்டாரா..?