கள்ளக்காதலியின் கணவரை குத்திக்கொன்ற காதலன்
சங்கர் என்ற 33 வயதான பி வேல்துரை சென்னையில் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இவருக்கு வீரபுத்திரன் என்ற நபருடன் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருப்பது கணவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து சங்கர் தனது மனைவியை சென்னைக்கு வரும்படி அழைத்துள்ளார். இதனால் திருமணத்துக்குப் புறம்பான உறவு முடிவுக்கு வரும் என எண்ணிய வீரபுத்திரன் அந்த பெண்ணின் கணவரை சந்திக்க சென்னை சென்றுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வீரபுத்திரன், சங்கரை தன்னுடன் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு, காதலியுடன் தப்பியோடினார். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :













.jpg)

.jpg)

.jpg)

