அமைச்சராக நீடிப்பாரா..செந்தில்பாலாஜி இன்று தீர்ப்பு.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்தத் தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என்பது பற்றி விளக்கமளிக்க உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த அனைத்து வழக்குகளின் விசாரணை தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நடைபெற்றது. ஆளுநரின் நம்பிக்கையை பெறாத நபர் அமைச்சராக நீடிக்க முடியாது என்று ஜெயவர்த்தன் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :