வீட்டிற்கு ரூ.3 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு

by Editor / 26-06-2025 12:47:02pm
வீட்டிற்கு ரூ.3 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு

கலைஞரின் கனவுத் திட்டமான குடிசையில்லா தமிழ்நாடு என்பதை நனவாக்கும் வகையில் 2030க்குள் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரிட் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருப்பத்தூரில் நலத்திட்டப்பணிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றார். பிரதமர் வீடு திட்டத்தின் கீழ் மிக சொற்ப அளவிலான தொகையே வழங்குவதாகவும், அதிலும் 40% மாநில அரசு வழங்குகிறது எனவும் கூறினார்.

 

Tags :

Share via