குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்.

by Editor / 12-09-2023 09:08:59am
குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்.

தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை,ஆகஸ்ட், ஆகிய மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் இங்கு உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துக் கொட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது  இந்த நிலையில் இந்த காலகட்டங்களில் குற்றால அருவிகளில் நீராடுவதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர் இந்த நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை இல்லாத நிலை நீடித்தது. இதன் காரணமாக அரிவிகளுக்கு நீர்வரத்து குறைந்த அளவே காணப்பட்டது இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் சாரல் மழை பெய்யததால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கொட்டத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் நீராடுவதற்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.  இதன் தொடர்ச்சியாக அங்கு  போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

 

Tags : குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்.

Share via