மணப்பாறையில் மெஜாரிட்டி இருந்தும் தி.மு.க தோல்வி

by Editor / 04-03-2022 10:50:42pm
மணப்பாறையில் மெஜாரிட்டி  இருந்தும் தி.மு.க தோல்வி

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி தலைவர் மறைமுகத் தேர்தலில், தி.மு.க.தலைமை நகராட்சி தலைவர் வேட்பாளராக நகரச் செயலாளர் மைக்கேல்ராஜை அறிவித்தது.இந்த நிலையில் தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத 5 பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று, முதன்மைச்செயலாளர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் தி.மு.க.தரப்பு பெரும்பான்மை பெற்றது.

 இந்நிலையில் இன்று  நடைபெற்ற மறைமுக வாக்கெடுப்பில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அ.தி.மு.க.வை சேர்ந்த பா.சுதா. என்பவர் 15 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

Tags : DMK defeated by majority in Manapparai

Share via