பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை.....இபிஎஸ்

by Staff / 27-04-2023 11:53:59am
பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை.....இபிஎஸ்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை, கூட்டணி தொடர்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை. பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்கிறது. அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். ஆடியோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

 

Tags :

Share via