லடாக் - கார்கில் மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் இந்தியா கூட்டணி 22 இடங்களில் வெற்றி.
கார்கில் மாவட்டத்தை நிர்வகிக்கும் தன்னாட்சி அமைப்பான லடாக் - கார்கில் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு, நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 22 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 26 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி 12 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றதால் இந்தியா கூட்டணி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், பாஜக, சுயேச்சை தலா 2 இடங்களில் வெற்றி பெற்றனர். சிறப்பு அந்தஸ்து நீக்கியபின் நடந்த முக்கிய தேர்தல் இதுவாகும்.
Tags : லடாக் - கார்கில் மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் இந்தியா கூட்டணி 22 இடங்களில் வெற்றி.