கார்த்திகை தீபம் அகல் விளக்கு விற்பனை
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டுபல விதமான அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடக்கிறது.
கார்த்திகை தீப திருநாள், நாளை கொண்டாடப்படுகிறத இந்நாளில் மக்கள், வீடுகளில் மூன்று நாட்கள் தீபம் ஏற்றுவர். இதற்காக தென்காசி நகரப்பகுதிகளில் பல இடங்களில், சாலை ஓரம் வண்டிகளில் அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.சாதாரண மண் அகல் விளக்கு நான்கு, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் விநாயகர் அகல் விளக்கு, மஹாலட்சுமி அகல் விளக்கு, தாமரை விளக்கு, ஐந்து திரி விளக்கு என, பல வடிவங்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.அதிகபட்சமாக மகாலட்சுமி அகல் விளக்கு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.மேலும்தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள ஆலயங்கள் மற்றும் பஜார் பகுதிகளில் நிரந்தமாக வைக்கப்பட்டுள்ள கடைகளிலும் கார்த்திகை தீபஅகல் விளக்குகள் விற்பனை நடந்துவருகிறது.
Tags :