பாஜக அலுவலகம்,நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு

by Editor / 23-09-2022 10:39:54am
 பாஜக அலுவலகம்,நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதி வி.கே.மேனன் சாலையில் நேற்று இரவு பைக்கில் வந்த இருவர் அப்பகுதியில் உள்ள பாஜக அலுவலம் நோக்கி பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர். பெட்ரோல் குண்டு வெடிக்காததால் அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை. பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கோவை ஒப்பனக்காரவீதியில் உள்ள துணைக்கடை ஒன்றின் மீது மண்ணென்னை குண்டு வீசப்பட்டுள்ளது. மண்ணென்னை குண்டு வீச்சால் தீப்பிடித்த நிலையில் கடையில் இருந்த ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தின்  ஈரம் காய்வதற்குள் 

பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோரின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு.2 கார், 2 ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்ப்பட்டுள்ளதாகவும் கூறப்ப்டுகிறது,மேலும் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும்,காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளன.மேலும் 
துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையிலான போலீஸ் குழுவினர்  சம்பவம் நடந்த  இடத்தில் குமரன் நகர் பகுதியில் ஆய்வுநடத்திவருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ்நாடு பாஜக கோயம்புத்தூர் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை திமுக அரசு உணர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

 பாஜக அலுவலகம்,நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு
 

Tags :

Share via