அனுமதி இல்லாத 90 டாஸ்மாக் பார்கள் மூடல்

by Staff / 24-05-2023 04:41:50pm
 அனுமதி இல்லாத 90 டாஸ்மாக் பார்கள் மூடல்

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் பார்கள் மீதும் நடவடிக்கையை மேற்கொள்ளப் பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட் டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த 2 நாட்களில் அனுமதி இன்றி மது விற்பனை செய்ததாக 25-க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில் களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி இயங்கும் பார்களை மூடுவதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் 115 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் சுமார் 20 பார்கள் மட்டுமே அனுமதியுடன் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து அனுமதியின்றி செயல்பட்டு அனைத்து பார்களையும் மூட நடவடிக்கை மேற் கொண்டனர். மாவட்டம் முழுவதும் சுமார் 90 பார்கள் அனுமதி இன்றி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பார்களை அதிகாரிகள் மூடினார்கள்.

 

Tags :

Share via

More stories