ஜோலார்பேட்டை அருகே நடைபெறும் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில்முதலமைச்சரின் மு. க. ஸ்டாலின்
இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நடைபெறும் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சரின் மு. க. ஸ்டாலின் ரயில் மூலம் சென்றடைந்தார். முதலமைச்சர் .சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஜோலார்பேட்டைக்கு பயணம் செய்தார் ,ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்து அடைந்து அவருக்கு திமுக தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தன ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த போது அங்கு திரண்டிருந்த மக்களை சந்தித்து அவர்களை கையாசத்தும் கைகொலிக்கும் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார், ஜோலார்பேட்டை ஒன்றியம் மண்டல வாடி பகுதியில் 47 சட்டப்பேரவை தொகுதிகளை சேர்ந்த வாக்குச்சாரி முகவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக நடைபெறுகிறது.திருப்பத்தூர் செல்லும் வழியில், தாமலேரிமுத்தூரைச் சேர்ந்த திருமதி மேகலா அவர்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவது குறித்தும், அரசின் மூலம் பெறும் பிற நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டபோது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதன் மூலம் குழந்தைகளின் பள்ளிச் செலவுகளுக்கு மிகவும் உபயோகமாக இருப்பதாகவும், தனது மகன் கல்லூரியில் தமிழ்நாடு அரசால் மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் மடிக்கணினிகளை பெற்று பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்து, அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கும், நேற்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் 5 ஆயிரம் ரூபாய் வழங்கியதற்காகவும் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
Tags :


















