சட்டசபையில் இன்று நீர்வளத்துறை மீதான விவாதம்

by Editor / 23-08-2021 09:42:51am
சட்டசபையில்  இன்று நீர்வளத்துறை மீதான விவாதம்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 14ம் தேதி வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முழு நிதிநிலை அறிக்கை திமுக அரசால் முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் துறைவாரியான விவாதங்கள் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்று முதல் முறையாக நீர்வளத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில் பொதுப்பணித் துறையில் இருந்து நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்டது. இதற்கு அமைச்சராக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமிக்கப்பட்டதன்மூலம் அணைகள், ஆறுகள், ஏரி, குளங்கள் மற்றும் நீர் ஆதாரத்தை பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நீர்வளத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்றதுடன் உறுப்பினர்களின் பேச்சைத் தொடர்ந்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories