ஒவ்வொரு அடியும் பார்த்து வைக்க வேண்டும்” - விஜய்க்கு ரோஜா அட்வைஸ்

தமிழ் சினிமா நடிகையும், ஆந்திர முன்னாள் அமைச்சருமான ரோஜா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, அரசியலுக்கு வந்துள்ள விஜய் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய ரோஜா, “சினிமாவின் உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வருகிற விஜய், அவர் வைக்கும் ஒவ்வொரு அடியும் பார்த்து வைக்க வேண்டும். சின்ன விஷயத்தால் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். இதனை மட்டும் அவர் சரியாக செய்தால், கட்டாயம் அரசியலில் அவர் வெற்றிப் பெறுவார்” என்றார்.
Tags :