இந்தியா பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இந்தியா பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவர் நவாஸ் ஷெரீப்புடன் ஊழல் விவகாரத்தில் ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு வெளியே உள்ள நவாஸ் ஷெரீப்பின் சொத்துக்கள் குறித்து இம்ரான்கான் பேசிய காணொலி இணையத்தில் பிரபலமடைந்தது . பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸைத் தவிர , உலகில் வேறு எந்த அரசியல்வாதிக்கும் பல பில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் இல்லை. நவாஸுக்கு வெளிநாட்டில் எத்தனை சொத்துகள் உள்ளன என்பதை யாராலும் சொல்ல முடியாது. எந்த நாட்டுத் தலைவருக்கும் பில்லியன் கணக்கான சொத்துக்கள் இல்லை.நமது அண்டை நாட்டில் கூட, இந்தியாவுக்கு வெளியே பிரதமர் மோடிக்கு எத்தனை சொத்துக்கள் உள்ளன என்று இம்ரான் கான் கடுமையான தாக்குதலைத் தொடங்கினார்.
Tags :