கொரோனா தினசரி பாதிப்பு 3-வது நாளாக உயர்வு

by Staff / 24-03-2022 11:52:11am
 கொரோனா தினசரி பாதிப்பு 3-வது நாளாக உயர்வு

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து கடந்த 21-ந் தேதி 1,549 ஆக இருந்தது.
 
மறுநாள் 1,581ஆகவும், நேற்று 1,778 ஆகவும் உயர்ந்த நிலையில், 3-வது நாளாக இன்றும் பாதிப்பு உயர்ந்துள்ளது.

அந்த வகையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரம் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரேநாளில் 2,531 பேர் நலம் பெற்றுள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 14 ஆயிரத்து 687 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 24 லட்சத்து 75 ஆயிரத்து 588 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 22,427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தைவிட 660 குறைவு ஆகும்.

கொரோனா பாதிப்பால் மேலும் 67 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் 61 அடங்கும். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,16,672 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் இதுவரை 182 கோடியே 23 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 31,81,809 டோஸ்கள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 6,61,954 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 78.49 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்  தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via