சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர்.
சென்னை: சென்னையில் முதல் முறையாக மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளதாக விளையாட்டு துறை செயலாளர் அபூர்வா தெரிவித்தார். சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரை நடத்த நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி எனத் தெரிவித்த டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அம்ரித், மீண்டும் சர்வதேச டென்னிஸ் தொடர் சென்னையில் துளிர்விட ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி என கூறினார்
Tags :