பாரதியார் பிறந்த நாள்: எடப்பாடி புகாழரம்...

பாரதியார் பிறந்த நாள் ஓட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், தாய்மொழி தமிழை உயிராக நேசித்த மகாகவி, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் சினம் கொண்டெழுந்த முற்போக்கு சிந்தனையாளர், இதழியல் புதுமையாளர், அந்நிய ஆட்சிக்கு அடங்க மறுத்து தன் எழுச்சிமிகு பாடல்களால் "ரௌத்திரம் பழகு" என்று உரக்க உரைத்தவர், நாட்டில் பல்வேறு துறைகளில் சாதிக்கக் கூடிய புதுமைப் பெண்கள் உருவாக விரும்பியவருமான முண்டாசுக் கவிஞர் பாரதியாரின் பிறந்தநாளில் அவரின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
Tags :