மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வு

by Staff / 11-12-2023 05:25:26pm
மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வு

மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உஜ்ஜைனி தெற்கு தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அவரை பாஜக அறிவித்தது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் பாஜக 163 இடங்களில் அபார வெற்றிபெற்றது. சிவராஜ் சிங் சவுஹானுடன், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் முதல்வர் பதவிக்கு போட்டிபோட்ட நிலையில் மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories