டெல்லியைத் தாக்க திட்டமிட்ட எட்டு தீவிரவாதிகள் திருப்பூரில் கைது

by Staff / 22-02-2026 01:34:14pm
டெல்லியைத் தாக்க திட்டமிட்ட எட்டு தீவிரவாதிகள் திருப்பூரில் கைது

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த எட்டு பேர் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர். டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு திருப்பூரில் உள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் சோதனை நடத்தி ஆறு பேரை கைது செய்தது இதனுடன் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டனர் நிஜனூர் ரகுமான் ,முகமது சாபத் ,உமர் ,முகமது லிட்டன், முகமது ஜாஹித் மற்றும் முகமது உஜல் என இவர்கள் அடையாளம் காணப்பட்ட வங்காள தேசத்தவர்கள் . இவர்கள் பாகிஸ்தானில் ஐ எஸ் ஐ மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாத அமைப்புகளின் வழிகாட்டுதலின்படி டெல்லி செங்கோட்டை மற்றும் முக்கிய கோவில்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருந்ததாக தெரிகிறது. இவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டை 16 சிம்கார்டுகள் மற்றும் 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .இவர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர் .டெல்லி மெட்ரோ மற்றும் பிற இடங்களில் சுதந்திர காஸ்மீர் போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியது மற்றும் சமூக வலைதளங்களில் தீவிரவாத ஆதரவு கருத்துக்களை பதிவிட்டது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.. கைது செய்யப்பட்ட இவர்கள் பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories