"அங்கன்வாடி மையம் மூடப்பட்டதாக தவறான தகவல்" அமைச்சர் கீதா ஜீவன்

by Editor / 07-07-2025 04:00:39pm

இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மூடப்பட்டதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறான தகவல் எனக் கூறிய அவர், தற்போது கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டு, மொத்தம் 54,483 அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. இதில் 7,783 அங்கன்வாடி காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டு, நேர்முகத் தேர்வு நடக்கிறது. தேவைப்பட்டால் கூடுதலாக அங்கன்வாடி மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

Tags :

Share via