கஞ்சா விற்பனை.. தட்டிக் கேட்ட தந்தை, மகனை வெட்டிய கும்பல்

மதுரை மாவட்டம் சோலை அழகுபுரம் பகுதியில், கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்டவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்வது குறித்து, கார்த்திக் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விற்பனை கும்பல், கார்த்திக் மற்றும் அவரது தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளது. காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்த பதறவைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :