ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 12 பேரின் ஜாமினை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 12 பேரின் ஜாமினை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அஸ்வத்தாமன், பிரதீப் ,ஹரிஹரன் உள்ளிட்ட 12 பேரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி ரத்து செய்தார். ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 12 பேரும் வரும் மார்ச் 6-ஆம் தேதிக்குள் சென்னை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாக காவல்துறை முன்வைத்த வாதத்தை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அஞ்சலை மற்றும் மலர்கொடி ஆகிய இரு பெண் குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது .இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் ,காவல்துறை மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் இந்த ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags :



















