இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஸ்வரன் செய்தியாளர்களிடம் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த செய்திகளை

by Admin / 28-02-2026 01:54:59am
இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஸ்வரன் செய்தியாளர்களிடம் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த செய்திகளை

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேறுப்புகளை ஆய்வு செய்த பிறகு  செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன என்றும் இது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கும் என்றும் தமிழகத்தில் தற்போது மொத்தம் 5. 67 கோடி வாக்காளர்கள் உள்ளனர் . இதில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை இரண்டு புள்ளி 89 கோடி ஆண் வாக்காளர்களை விட 2.77 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் . 18 -19 வயதுடைய சுமார் 12.5 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் மற்றும் 20 முதல் 29 வயதுடைய சுமார் ஒரு கோடி இளைஞர்கள் பட்டியலில் உள்ளதாகவும் வேட்பாளர்கள் ஆன்லைன் மூலமாகவும் மனு தாக்கல் செய்யலாம் என்றும் இருப்பினும், சட்டப்படி நேரடியாகவும் மனு அளிக்கலாம் என்றும் தெரிவித்ததோடு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்ச் செய்திகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் வாக்குப்பதிவு நிலவரம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு முறை புதுப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார் .கணக்கில் வராத பெரும் அளவிலான பணம் கண்டறியப்பட்டால் அவை முடக்கப்படும். சிறு வியாபாரிகள் உரிய அனுமதி இன்றி அதிக பணம் எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தலை வழங்கினார் .தமிழகத்தில் தேர்தல் நியாயமாகவும் வெளிப்படை தன்மையுடனும் நடத்தப்படும் என்றும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்க்க தேர்தல் ஆணைய இணையதளத்தை அல்லது ஓட்டர்ஸ் ஹெல்ப் லைன் செயலியை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

Tags :

Share via

More stories