முதலமைச்சருக்கு ராக்கி கயிற்றை கட்டிய பிரம்ம குமாரிகள்

ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் அமைப்பினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (ஆகஸ்ட் 19) சந்தித்து கையில் ராக்கி கயிற்றை அணிவித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜான்சி ராணி, சகோதரிகள் லட்சுமி, மல்லிகா, கயல்விழி மற்றும் ரவீந்திரன் ஆகியோர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கைகளில் ராக்கி கயிற்றை அணிவித்தனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகள் உடனிருந்தனர்.
Tags :