ராஜ்நாத் சிங் உண்மையை பேசினார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 19-08-2024 02:13:17pm
ராஜ்நாத் சிங் உண்மையை பேசினார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக- பாஜக இடையே கூட்டணி என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ராஜ்நாத் சிங் உண்மையை பேசினார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர், "கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசினால் என்ன பேசுவார்களோ அதைவிட அதிகமாக, திமுககாரர் பேசுவதை விட சிறப்பாக தலைவர் கலைஞரைப் பற்றி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். கலைஞரை புகழ்ந்து பாராட்டி பேச வேண்டும் என்று அவசியம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு இல்லை. ஆனாலும், அவர் உள்ளத்தில் இருந்த உண்மையை பேசினார்" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via