குஜராத் மாடல் vs திராவிட மாடல் - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

by Staff / 02-03-2024 02:57:25pm
குஜராத் மாடல் vs திராவிட மாடல் - அமைச்சர்  மனோ தங்கராஜ் விளக்கம்

அமைச்சர் மனோ தங்கராஜ் தனது x பதிவில், திராவிட மாடலுக்கும் குஜராத் மாடலுக்கும் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார். 2021 -ஆம் ஆண்டு தலைவர் ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்றபோது, பள்ளி குழந்தைகளுக்கு வழங்கும் பைகளில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அப்படங்களை மாற்ற ரூ.13 கோடி செலவாகும் என்று தெரிந்த போது, அவற்றை மாற்ற வேண்டாம், அதற்கு செலவிடும் பணத்தை குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டார். இதுதான் திராவிட மாடல். இன்று பிரதமர் மோடி தன் படத்தை தானியங்கள் வழங்கும் பைகளில் ஒட்ட ரூ. 15 கோடி செலவிடுகிறார். இதுதான் சமூக நீதி அரசியலுக்கும், ஏகபோக சர்வாதிகார அரசுக்கும் உள்ள வேறுபாடு‌ என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories