பாஜக - தமாகா முதல் சந்திப்பு.. வாசன் விளக்கம்
பாஜக - தமாகா இடையேயான முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது. தேர்தல், களப்பணி, வெற்றி வியூகம் தொடர்பாக இந்த சந்திப்பில் பேசினோம். தமாகா தேர்தல் குழு அமைத்தபின் முறைப்படி தொகுதி எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்படும். மார்ச் 4 முதல் 6 வரை தமாகா விருப்ப மனு பெறவிருக்கிறது. அதன்பின் பாஜக குழு தமாகா உடன் பேச்சுவார்த்தையை தொடங்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
Tags :