பாஜகவின் மட்டமான அரசியல்: ஜோதிமணி

by Staff / 02-03-2024 01:49:09pm
பாஜகவின் மட்டமான அரசியல்: ஜோதிமணி

தமிழ்நாட்டில் பாஜக கட்டவிழ்த்து விட்டிருக்கும் ED, CD அரசியல் அவமானகரமானது என கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இப்படியொரு மட்டமான அரசியலை இதுவரை தமிழ்நாடு எதிர்கொண்டதில்லை. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் 2024 மக்களவை தேர்தலில் பதில் சொல்வார்கள் என தெரிவித்துள்ளார். பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை அமலாக்கத்துறையை காரணம் காட்டி தங்கள் கட்சிக்கு இழுக்கும் பாஜகவுக்கு அவர் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார்.

 

Tags :

Share via