பாகிஸ்தானுக்கு அமித்ஷா எச்சரிக்கை

by Editor / 14-10-2021 06:42:51pm
பாகிஸ்தானுக்கு அமித்ஷா எச்சரிக்கை

 ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. பயங்கரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் எல்லைகளை யாரும் தொந்தரவு செய்தால் பதிலடி கொடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துளளார்.

கோவாவில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிய அமித்ஷா விழாவில் பேசியதாவது:- இந்தியா எல்லை பகுதியில் தாக்குதலுக்கு உள்ளானபோது ஒரு காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தது. ஆனால் இப்போது இந்தியா ​​பயங்கரவாத தாக்குதல்களுக்கு தகுந்த பதிலை அளித்து கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகள் பூஞ்ச் ​​மீது தாக்குதல் நடத்தியபோது, ​​இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் வடிவில் தகுந்த பதிலை அளித்தது. அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருந்தது..இந்தியா அதே மொழியில் பதில் அளிக்கும் என்ற செய்தியை அது கொடுத்தது. பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையிலான சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒரு முக்கியமான படியாகும். இந்தியாவின் எல்லைகளை யாரும் சீர்குலைக்க முடியாது என்று நாம் எதிரிகளுக்கு தெளிவான செய்தி அனுப்பியுள்ளோம். தற்போது இந்தியாவின் எல்லைகளை யாரும் தொந்தரவு செய்ய முடியாது என்ற செய்தி தெளிவாக உள்ளது என்று அமித்ஷா தெரிவித்தார்.

 

Tags :

Share via