சீமானே.மன்னிப்பு கேள்-விஜய் ரசிகர்கள் போஸ்டர்

by Editor / 14-10-2021 06:41:10pm
சீமானே.மன்னிப்பு கேள்-விஜய் ரசிகர்கள்  போஸ்டர்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், உள்ளூர் செல்வாக்கால் அவர்கள் வெற்றி பெற்றதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரை உள்ளூர் செல்வாக்குத்தான் முக்கியம். விஜய்க்காக வாக்களித்தார்கள் என நான் நினைக்கவில்லை.என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

அந்த போஸ்டரில்.. "அரசியலின் செல்லாக்காசு ச்சீ சீமானே.. வன்மையாக கண்டிக்கிறோம், எல்லா தேர்தலிலும் அடி வாங்கும் உங்களுக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு? உடனடியாக மன்னிப்பு கேள்.. இது எச்சரிக்கை அல்ல கட்டளை.." இவ்வாறு சீமானை கடுமையாக சாடி போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo