பொதுவுடைமைத்தலைவர் நல்லகண்ணுவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பொதுவுடைமைத் தலைவர் நல்ல கண்ணு நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார். அனைத்து அவர்தம் வலைதள பதிவில், போராட்டம் - தொண்டு - பொதுநலன், இதுவே தோழர் நல்ல கண்ணு அய்யா அவர்களின் நூறாண்டுகால வாழ்க்கைப் பக்கங்களில் நிறைந்திருக்கும் சரிதம்! எளிமையான வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்று சொல்வதைவிட, பொதுவுடைமைக் கருத்தியலுக்காகக் கடுமையான வாழ்வை எதிர்கொண்ட தீரர் அவர்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு காணும் வேளையில், செங்குருதி சிந்திப் பாடுபட்ட தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களும் நூற்றாண்டு காண்கிறார்! இயக்கமே உயிர்மூச்சென வாழும் அவரைப் போற்றுவோம்! தகைசால் தமிழரே, தமிழ்நாடே தங்களை வாழ்த்துகிறது! தங்களது வழிகாட்டுதலில் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் முன்செல்கிறோம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Tags :