‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி ஒரு டோஸின்  விலை ரூ.995- ஆக நிர்ணயம்

by Editor / 14-05-2021 08:25:29pm
‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி ஒரு டோஸின்  விலை ரூ.995- ஆக நிர்ணயம்

 

மத்திய அரசு அனுமதியைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி முதல்கட்டமாக 15 லட்சம் டோஸ் தடுப்பூசி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. 2-ம் கட்டமாக அதே எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் இம்மாத இறுதியில் வர உள்ளன. 
இந்தியாவில் ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது.  இந்த நிலையில்,  ஸ்புட்னிக்-வி தடுப்பூசி நாட்டிலேயே முதன் முறையாக ஐதராபாத்தில் முதல் கட்டமாக இன்று போடப்பட்டது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை ரூ. 995.40 (5% ஜிஎஸ்டி உள்பட) என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும்போது விலை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின் என இரண்டு இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் மூன்றாவதாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via