முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு திடீர் கடிதம்.

by Staff / 27-05-2024 04:54:50pm
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு திடீர் கடிதம்.

திருநெல்வேலியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த சபாநாயகர் அப்பாவு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ராதாபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பல நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளது. எனவே திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் இதை பேரிடராக கருதி, சேதத்தை ஆய்வு செய்ய வேண்டும். மாண்புமிகு முதல்வர் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் முழுமையான நிவாரணம் கிடைத்திட ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories