டாஸ்மாக்கில் அலைமோதும் கூட்டம்; கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் இல்லை அமைச்சர் வேதனை

by Editor / 20-08-2022 01:17:48pm
டாஸ்மாக்கில் அலைமோதும் கூட்டம்; கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் இல்லை அமைச்சர் வேதனை

சென்னை தியாகராயர் நகரில் உள்ள வாணி மஹாலில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டு துறை சார்பில் நாட்டிய விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இயற்கையையும் கலையையும் மக்கள் மறந்து விட்டனர். நல்ல பண்பாடு மற்றும் ஆன்மீக தன்மையை உருவாக்க கலைகளால் மட்டும் தான் முடியும். ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் இணையத்தில் வைத்து உள்ளோம். அதை போல நம் கலைகளை டிஜிட்டல் உலகிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மதுபான கடையில் கூட்டம், மெடிக்கலில் கூட்டம் இருக்கிறது ஆனால் பரதநாட்டிய நிகழ்வில் கூட்டம் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.எத்தனை தடைகள் வந்தாலும் அதை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடுப்பார். அதிமுக தற்போது இருப்பது கேப்டன் இல்லாத படகு போன்றது, அவர்கள் மற்றவர்களை குறை கூறுவது உகந்ததாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo