இதே மரபு இனி வரும் காலங்களில் தொடர வேண்டும்-டாக்டர்.ராமதாஸ்

இதே மரபு இனி வரும் காலங்களில் தொடர வேண்டும்-டாக்டர்.ராமதாஸ்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் 600
முனைவர்களுக்கான நேரடியாக ஆளுனர் கரங்களால் பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை மாற்றம் வரவேற்கத்தக்கது.முனைவர் பட்டதாரிகளுக்கு நேரடியாக பட்டச்சான்றிதழ் வழங்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது சரியல்ல...முனைவர் பட்டதாரிகளுக்கு நேரடியாக சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என நேற்று வலியுறுத்தியிருந்தேன்.அது இன்று ஏற்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு ஆளுனர் மாளிகையுடன் தமிழக அரசின் உயரகல்வித்துறை நேரடியாக பேசி இதை சாத்தியமாக்கியிருப்பதாக
அறிகிறேன்.தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள். பட்டமளிப்பு விழாவில் இதே மரபு இனி வரும் காலங்களிலும்
தொடர வேண்டும் டாகடர் ராமதாஸ் தம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
Sent from my iPad
Tags :