ஜனநாயகன் படத்திற்கு காங்கிரஸ் கட்சி அளிக்கும் ஆதரவு கூட்டணி நோக்கிய நகர்வா... பிரவீன் சக்கரவர்த்தி
சென்னையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு காங்கிரஸ் கட்சி அளிக்கும் ஆதரவு கூட்டணியை நோக்கிய ஒரு நகர்வாக பார்க்கக் கூடாது என்றும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுவதில் உள்ள தாமதத்தை கண்டித்து ஆதரவு தெரிவிப்பது என்பது பேச்சுரிமை கலை சுதந்திரம் சார்ந்தது என்றும் இது திரை உலகம் மீதான தாக்குதல் என்கிற கருத்தையும் முன் வைத்தார் .அத்துடன் இப்படத்திற்கு ஆதரவு அளிப்பதன் மூலம் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க முயற்சி இருப்பதாக எழுந்துள்ள யூகங்களை மறுத்த அவர், கூட்டணி குறித்த முடிவுகளை கட்சி தலைமை மட்டுமே எடுக்கும் என்பதை தெளிவு படுத்தினார். ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்காமல் தவிர்ப்பது தமிழ் பண்பாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும் நரேந்திர மோடி அரசு இதை வேண்டுமென்றே முடக்குவதாகவும் அவர் குற்றம் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
Tags :


















