கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 17 பேர் திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்பாலுவா கிராமத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர் திங்கள்கிழமை மாலை மவுண்ட்பூர் கிராமத்தில் நாட்டு மதுபானத்தை அருந்தினர், அவர்களில் 17 பேர் கடுமையாக வாந்தி எடுத்தனர். பாதிக்கப்பட்டவர்கள் சிகிட்டியில் உள்ள சமூக நல மையத்தில் அனுமதிக்கப்பட்ட பிறகு, ஐவரின் உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் அவர்கள் பெர்ஹாம்பூர் நகரில் உள்ள எம்கேசிஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
Tags :