"COME BACK சொல்ல வேண்டிய காலம் வரும்'-தமிழிசை சௌந்தரராஜன்

by Staff / 20-08-2024 04:08:30pm

பிரதமர் மோடியை GO BACK என்று சொன்னவர்கள், COME BACK சொல்ல வேண்டிய காலம் வரும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் அவர், "பிரதமர் மோடியை GO BACK என யாரும் சொல்ல முடியாது. GO BACK என்று சொன்னவர்கள் வரவேற்க வேண்டிய சூழல் வரும். இதுதான் இன்றைய அரசியல் நிலை. அன்று GO BACK சொன்னவர்கள், தொடர்ந்து GO BACK சொல்ல முடியாத அளவுக்கு தள்ளப்படுகிறார்கள். மோடி உயர்ந்து கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via