.கேரள கடற்கரையில் சரக்கு கப்பல் விபத்து.
கேரளா அரபிக் கடலில் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சின் சென்ற ஆபத்தான எரிபொருள் கண்டெய்னர் கப்பல் கடலில் மூழ்கியதையடுத்து கேரள கடற்கரையில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கரையில் மிதக்கக்கூடிய அடையாளம் தெரியாத பொருட்களை நெருங்க வேண்டாம் என்று கேரளா முழுவதும் உள்ள கடற்கரைப் பகுதிகளில் கடலோரப் போலீசார் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.
Tags : கேரள கடற்கரையில் சரக்கு கப்பல் விபத்து



















