ஈபிஎஸ் தலைமை - அதிமுக படுதோல்வி அடையும்
தனக்கு பதவி கொடுத்தவர்களுக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி, தற்போது தொண்டர்களுக்கும் துரோகம் செய்ய உள்ளார். எடப்பாடி பழனிசாமி, தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் வருகின்ற மக்களவைத் தேர்தலிலும் பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வி அடையும். எனவே, தொண்டர்கள், அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்க ஓரணியில் திரள வேண்டும் என மன்னார்குடியில் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
Tags :



















