வயநாட்டில் முண்டகை பகுதியில் நிலச்சரிவு

வயநாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக முண்டகை பகுதியில் பெரும்வெள்ளத்துடன், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் முண்டகை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மழை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Tags :