சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கில் அனைவரும் விடுதலை

கடந்த 2006ல் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். சி.வி.சண்முகம் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி ஒரு கும்பல் அவரை கொலை செய்ய முயன்றது. அவர் அதிர்ஷ்டவசமாக தப்பிய நிலையில், அவரது கார் ஓட்டுநர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாமகவை சேர்ந்த 20 பேரில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேரை விடுதலை செய்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :