21 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது.
மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை, கடத்தல், பதுக்கல் ஆகியன பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.அதனடிப்படையில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், மீனாட்சி அம்மன் கோவில் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இப் தனிப்படையினர் குருவிக்காரன் சாலை பகுதியில் ரோந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார்.போலீசார் அவரை பிடித்து அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர்.அதில் 21 கிலோ கஞ்சா இருந்தது.அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்த மதன்குமார் (30) என தெரிந்தது.இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி மதுரையில் விற்று வந்துள்ளார்.போலீசார் அவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :